ஆற்றொழுக்கு

மலேசியா-வாசுதேவன்மலேசியாவை வித்தகக் கலைஞராக நிறுவுவதற்கு யாரும் பிரயத்தனப்படுவதேயில்லை. அதற்கான தேவைகள் இருப்பதாகவும் எனக்குத் தெரிந்ததில்லை. இருப்பினும் மலேசியாவைப் பிறருக்கு (குறிப்பாக டிஎம்எஸ்ஸுக்கு) மாற்றாகவோ, பிறரை நகலெடுக்கும் குரலாகவோ முன்னிறுத்தும் அடாசு வேலையைச் சிலர் தொடர்ந்து செய்வதில் எனக்குப் பெரும் வருத்தமும் கோபமுமுண்டு.

பின் எழுபதுகளில் மேலெழுந்து வரும் ராஜா எப்படி தன் முதல் வணக்கத்தை மெல்லிசை மன்னருக்கு வைத்தாரோ, அப்படித்தான் ’ஆட்டுக்குட்டி’யில் மலேசியாவும் வலது கையை இடது காலில் வைத்து டிஎம்எஸ்ஸுக்கு வணக்கம் வைத்ததாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னாட்களில் சிவாஜிக்கோ, சத்யராஜுக்கோ பாடும்போது இந்த மரியாதை தொடர்ந்ததென்பதுவரைதான் சரி. இத்தொடரின் முக்கியப் புள்ளியாக நான் நினைப்பது:

(’இதயமே’ – ’அடுத்தாத்து ஆல்பர்ட்’) – இங்கு மேற்சொன்ன இருவருமே பயணிக்கின்றனர், தனித்தன்மையுடன். இவற்றை ஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு மலேசியாவின் ஆளுமையை ’அவருக்கேயுரிய இடத்தில’மர்ந்து மட்டுமே பேச நினைக்கிறேன்.

ராஜா உருவாக்கிய அல்லது கட்டமைத்த களங்களில் எனக்கு மிக நெருக்கமான ஒன்றை நான் #RajaGrande என்று வகைப்படுத்துவதுண்டு. இசையறிவு துளியுமில்லாததால் இவ்வகைமையைத் தெளிவாக வரையறுக்க என்னால் இதுவரை முடிந்ததில்லையெனினும் இன்று துணிந்து முயற்சிசெய்கிறேன்: ஓரளவு மெத்தனமான அல்லது அதிகபட்ச வேகமில்லாத மெட்டு, அதைச் சுற்றி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்படியோ அல்லது மெட்டை இருமடங்கு உயர்த்திப் பிடித்தோ செல்லும் தாளக்கட்டு. தறிகெட்ட வெள்ளத்தில் துடுப்புகளின்றித் தன்னியல்பான வேகத்தில் நகரும் ஓடமொன்றில் அமர்ந்து இருகரைகளையும் வேடிக்கை பார்ப்பதைப் போன்றதுதான். இப்படி இருந்தால்தான் நான் நினைக்கும் உணர்வு கிடைக்கும் என்பதுமில்லை. எதற்கும் இந்தப் பட்டியலைப் பார்த்திடுங்களேன்: http://www.paadal.com/playlist/rajafans/GrandeRaja

இக்களம் தரும் பிரம்மாண்டத்தில் ஒரு பாடகர் பெரிதாக என்ன செய்துவிட முடியும்? மலேசியா தனதாக்கிக் கொண்ட #RajaFolkஉம் எனக்கு நானே அடையாளப் படுத்திக்கொண்ட #RajaGrandeவும் ஒன்றிணைவதாக நினைக்கும் பாடல் இது: (’கன்னிப் பொண்ணு’ – ’நினைவெல்லாம் நித்யா’)

கன்னிப்பொண்ணு கைமேல(லே)

கட்டிவெச்ச பூமாலை(லெ)

பாடல் முழுவதுமே நமக்கு லட்டுதான் என்றாலும் திராட்சை நிரம்பிய பகுதிகளாக நான் சரணங்களை எடுத்துக்கொள்கிறேன். பல்லவியின் இரண்டு வரிகளை மேலே தந்ததற்கும் நான் கற்பித்துக் கொண்ட காரணங்களுண்டு – சம்பந்தப்பட்டது ராஜா என்பதால் இவ்வித கற்பிதங்களுக்கு முன்னனுமதி பெற்றுவிட்டேன். முதல் சரணத்தில் ஆண் பெண்ணுக்கு மாலையணிவிப்பதாகவும் இரண்டாவதில் பெண் அணிவிப்பதாகவும் நினைப்பதுதான் அது. குறிப்பிட்ட நபர் ஒரு வரியை முன்னெடுத்துச் சென்று சிறிது தயக்கம் கலந்த வெட்கத்துடன் அடுத்தவரிடம் ஒப்படைப்பதும் அவர் அதைத் தாங்கி ஏற்பதுமாகச் சரணங்களைத் தொடுத்திருக்கிறார் ராஜா.

இவையனைத்தும் நடக்கும் அட்டகாசமான நாடகத்தை நிகழ்த்திக் காட்ட நமக்குக் கிடைத்திருப்போர் மலேசியாவும் சுசீலாவும். திரைநடிப்பென்பதைப் பின்னணியில் மட்டுமின்றி திரையிலும் முயற்சிசெய்தவர் மலேசியா. பாடல் முழுவதும் தன் நடிப்பாற்றலைக் குரலில் அனாயசமாகக் கடத்திவிடுகிறார். ’.. அச்சம் கொண்டது..’, ’..நெஞ்சு துடிக்கிது..’ ஆகிய இடங்களில் மட்டுமே சுசீலாவுக்கு இது கைகூடுகிறது. இருவரது வயதையும் மேற்சொன்ன வகைமைகளையும் நாம் நினைத்துக்கொள்ள வேண்டுமோ என்று நினைக்கிறேன்.

‘வானம் மெல்ல’வின் ’தருணம் தருணம்’ போன்றதொரு நெகிழ்வை இங்கு ‘முத்தம் தர தம்தர யாரது கண்டது’வில் கொண்டு வரும் வாய்ப்பு மலேசியாவுக்குக் கொடுக்கப்பட்டதுதான்(அமைந்ததாகவே இருந்தாலும்) ’முத்தாய்ப்பு’.

Advertisements

37 thoughts on “ஆற்றொழுக்கு

  • நாங்க என்ன வச்சுக்கிட்டா சும்மா இருக்கப்போறோம்? 🙂 நீங்களும் எழுதலாம்..

 1. @@மலேசியாவைப் பிறருக்கு (குறிப்பாக டிஎம்எஸ்ஸுக்கு) மாற்றாகவோ@@ இதை அடிக்கடி சொல்வது நான்தான். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? ராசா செய்தது அதுதானே,

  டிஎம்எஸை வைத்து போணி செய்வது பெரும் துயரம், இதை அவரே நாசூக்காக பல இடங்களில் சொல்லிவிட்டார் eg. அவர் ரகசியமாத்தான் பாடினார் ஆனா அது தெருமுக்கு வரைக்கும் கேட்டிச்சு (பில்டப் என்னுடையது – but you get the context , no?)
  இசைக்கு மேலே கம்பீரமாக முழங்கும் குரல் அவருக்கு – குழைவு நெளிவு சுளிவுகள் கூட கம்பீரமாகத்தான் இருக்கும்..

  உணர்வுகளை, மெட்டு மற்றும் இசையைக்கொண்டு பிரதானப்படுத்தி வரிகளையும் பாடகர்களையும் மொத்த ஹார்மனியில் ஒரு பகுதியாக மாற்றியவர் ராசா என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது. இதற்கு யார் பொறுத்தமானவர்களோ அவர்களுடன் பணியாற்றினார்

  அடுத்து (இது ஒரு subjective பார்வை ஆனால் உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்) டிஎம்எஸ் பாடினால் அது ஐயா எம்எஸ்வி பாடல் போலவே எனக்குத் தோன்றுகிறது. எம் எஸ்வி இன்னமும் இருந்த காலத்தில் எல்லருக்குமே தோன்றியிருக்கும்.

  அடுத்து சிவாஜி – எம்ஜியாருக்கு குரலை கொடுத்த டிஎம்எஸ்ஐ போய் ரஜினி கமலுக்கு யோசித்து பார்க்கமுடியுமா – ஒரு டைப்பாத்தான் இருக்கும், ஆனா செட் ஆகாது. பின்னாளில் சிவாஜிக்கே வேறுசிலரை பாடவைத்து டிஎம்எஸ் சிவாஜிக்கு உருவாக்கிய அந்த கம்பீரத்தை தனக்கு வேண்டிய நெளிவு சுளிவுகளோடு இறுதியில் மலேசியாவை வைத்தே சாதித்தார் என்பதுதான் வரலாறு.

  மலேசியாவை பிறருக்கு மாற்று என்பதை அவர்கள் பாணியை பின்பற்றுகிறார் என்றோ அல்லது அவர்களின் நகல் என்றோ புரிந்து கொள்ளக்கூடாது. அவர் பெண் தன்மை ஏதுமில்லாத ஆண் குரலில் (ராசாமொழி) டிஎம் எஸ்சுக்கு அடுத்த கட்டம் அந்த கட்டத்தின் உச்சம். இதிலென்ன பிரமாதம் ராசாவின் சட்டகத்திற்குள்ளே அவர் பாடியதால்தான் ஜெலித்தார் என்று கருதினால் அது பிழை
  கோலோச்சிய டிஎம்எஸ் குரலை மலேசியாவை கொண்டு எளிதாக ரீப்ளேஸ் செய்ய முடிந்த ராசாவால் மலேசியாவுக்கு மாற்றை கண்டுபிடிக்க முடியவில்லை…தேடிக்கொண்டே இருக்கிறார். யார் யாரையெல்லாம் சோதித்திருக்கிறார் என்பதை கடந்த பத்து ஆண்டு ஆல்பங்களைக்கேட்டால் நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதற்கு காரணம் நீங்க மேலே எழுதியிருப்பதுதான், தானே ஒரு பாத்திரமாக ஆகிவிடுகிறார். அது ஒரு தனிச்சிறப்பான அம்சம். அதானால்தான் நேற்று மலேசியா டிஎம்எஸ்ஐ மட்டுமல்ல பிபிஎஸ்ஐயும் ரீப்ளேஸ் செய்தார் என்று எழுதினேன். மலேசியாவின் குரல் வளம் அப்படி! கம்பீரமாக முழங்குவதிலிருந்து தீயிலிட்ட வெண்ணெயாக உருகுவது வரை இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கிறது. இந்த அளவுக்கு விரிந்த ஒரு வளத்தை பெற்றவர் அதை வித்தையாக வளத்தவர் வேறு யாருமில்லை. அவர் பேசினாலே அது மியூசிகலாத்தான் இருக்கும். இதற்கு மேல் என்ன சொல்ல!!!

  பின்குறிப்பு – ஆட்டுகுட்டி முட்டையிட்டு பாடல் ராசா சொல்லியபடி மலேசியா பாடவில்லை, தவறாக பாடப்பட்ட பாடலே நீங்கள் கேட்பது என்று ராசா சொல்லியிருக்கிறார் 😉 அதனால் இந்த முதல் வணக்கம் #ரிஜெக்டெட்.

  • ம்ம். இவ்ளோ ‘லெங்க்த்தா’ டீட்டெயில் செய்ற அளவுக்கு வொர்த்தில்ல. வருத்தம்னு சொன்னது, நீங்க சொல்றதால இல்லை. இதன் சாரம் இத்தோடவே வெளில போறதாலதான். யோசிங்க. :-/

   • இதெல்லாம் பெருமை! ஒரு ஜயண்டை ரீப்ளேஸ் செய்தார் என்பது பெருமை – உங்க வருத்தம் என்னவென்று இன்னமும் புரியவில்லை

  • Also, உங்களை இப்டி மூணாம் மன்சன் மாதிரி ‘சிலர்’னுல்லாம் சொல்றதுக்கில்ல 🙂 அது பரவிச் செல்லும் இடங்களைச் சுட்டவே..

  • நான் எழுதலாம்னு நினைச்சுருந்ததை almost நீர் எழுதிட்டீர். 🙂
   கிஷோர் குமார் பற்றிக் கூட நேத்து சொன்னீங்க. அதை விடுத்து, தமிழ்த் திரைப்பட இசைன்னு மட்டும் எடுத்தால், மலேசியா அவரின் முன்னோடிகளுக்கு இணையான பாடகராகவோ அல்லது மாற்றாகவோ பாடினார்னு சொல்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இதை objective ஆகவே அணுகலாம்.

   //மலேசியாவை பிறருக்கு மாற்று என்பதை அவர்கள் பாணியை பின்பற்றுகிறார் என்றோ அல்லது அவர்களின் நகல் என்றோ புரிந்து கொள்ளக்கூடாது. அவர் பெண் தன்மை ஏதுமில்லாத ஆண் குரலில் (ராசாமொழி) டிஎம் எஸ்சுக்கு அடுத்த கட்டம் அந்த கட்டத்தின் உச்சம்.//

   Can’t agree more!
   அவர் முன்னோடிகளின் பாணியையோ அல்லது சமகாலப் பாடகர்களின் பாணியையோ துளிக்கூட மலேசியா பின்பற்றவில்லை. (பிற பாடகர்களின் குரலைச் சில பாடல்களின் தேவை கருதி conscious ஆக mimic செய்தார் என்பது வேறு. அதில் அவர்களின் ’குரலை’ தனது பாணியில் பாடினார் 🙂 )

   Clicheயான ஒப்பீடுதான். இருந்தாலும் சொல்றேன். 🙂
   மலேசியா தண்ணீர் போன்றவர். பாட்டை அவரிடம் கொடுத்துவிட்டால் அதன் வடிவத்தை அப்படியே பிரதிபலிப்பார். அதன் தேவைக்கு மேல் துளிக்கூட கூடவோ குறையவோ இருக்காது. (இங்க நான் பிற பாடகர்களைப் பற்றிச் சொல்லலாம், ஆனா வேண்டாம் 😉 )
   The bottom line is மலேசியாவின் தனித்துவத்தை யாரோடும் ஒப்பிட முடியாது, கூடாது. (அவருக்கு முன்னேயும், சமகாலத்திலும், பின்னேயும்).
   இன்னும் சில கருத்துகள் இருக்கு. இப்பக் கோர்வையா எழுத வரமாட்டேங்குது. பொறுமையா எழுதுறேன். 🙂

   • ஏம்ப்பா தம்பி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, அடுத்த பதிவை எழுத ஆரம்பிச்சுட்டியா இல்லியா இன்னும்? ம்ம் ம்ம், சீக்கிரம் சீக்கிரம்..

   • ஆக்சுவலா என்னோட பின்னூட்டம் மாபியாவோட பின்னூட்டத்துக்குப் பதிலாப் போட்டது. ரிப்ளை பொத்தான அமுத்திதான் போட்டேன், ஆனா அது குறிப்பிட்ட பின்னூட்டத்துக்கு மட்டும் தனியா வராதா? பொதுப் பின்னூட்டமாதான் வருமா?
    (ரெக்ஸண்ணன் தளத்துல குறிப்பிட்ட கமெண்ட்டுகளுக்கான ரிப்ளை அது கீழயே தனியா indent ஆகி வருது).
    தம்பி மயில் என்னன்னு கொஞ்சம் பாருப்பா 😉

   • பிரசன்னா அது என்னான்னா ஒரு பின்னூட்டத்துக்கு 5 லெவல்தான் பதில் திரி போல வரும். அதுக்கு மேல அடுத்த பின்னூட்டமா பதிஞ்சிடும். இதை 10 லெவலா மாற்றிட்டா பிரச்சனைதீர்ந்தது

 2. வியன்புலமாக ஆற்றொழுக்கு என தெளிந்த நீரோட்டமாக இல்லையானினும் பெருவெள்ளமாக பொங்கும் பூம்புனலாக பெருக்கெடுத்து விட்டீர்கள்.

  சரி, ரஜினிக்காக மலேசியா குரல்கொடுத்த பாடல்கள் சற்றேறக்குறைய அனைத்து பாடல்களும் டாப்ல இருக்கே. அதைப்பத்தி அடுத்த “நீரோட்டத்தில்” பொங்கவும்.

  அதுசரி வியன் புலம்… எந்த “நாட்டிலிருக்கிறப்போ” தோணுச்சி இந்த சொல்…..?

  • கண்டிப்பா. நீங்கல்லாம் எடுத்துக்கொடுத்தா நான் தொடுத்துவைப்பேன், அவ்ளோதான். 😉

 3. நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதவும். தன்னளவிலேயே பிறரோடு ஒப்பீடு செய்யமலே மலேசியா மிகச் சிறந்த பாடகர். தொடராக எழுதும்போது அவருடைய பாடல்களை முழுவதுமாக பார்த்துவிட்டே கடைசியில் பிறரோடு ஒப்பீடு செய்து முடிக்கலாம். வாழ்த்துக்கள்

 4. ஊக்கத்திற்கு நன்றி அருள். ஒப்பீடு இன்று இங்கு தேவையில்லாததுதான். இந்தப் பாடலைக் குறித்து மேலும் எழுதமுடியாமல் போனதற்குக் காரணமும் அதுதான்.

  • நெலா காயுது பாட்டை டிஎம்எஸ் பாடியிருந்தாலாவது ஒப்பிடலாம் மத்தபடி எனக்கும் ஒப்பீடு செய்யறதுல்லாம் துளிக்கூட விருப்பம் இல்லை….

  • . இந்தப் பாடலைக் குறித்து மேலும் எழுதமுடியாமல்…..ஙஙங
   இவ்ளோ உசாரா இருக்கனும்னு நினைச்சா அப்புறம் பிளாகு காத்தாடும்…

 5. பின்னிப் பெடல் எடுப்பது… டிஎம்எஸ் ஆக இருந்தால் என்ன மலேஷியா அண்ணனாக இருந்தால் என்ன… கிடைக்கும் இசைப் பிரசாதத்தை சுவைக்கக் கொடுத்து வைப்பதே நம் பாக்கியம் என கருதுகிறேன்.

  அருமையான பாடலை அருமையாக விளக்கி தெரியாத கோணங்களை யோசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி… இன்னும் பல பாடல்களை இப்படி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றது.. தொடரட்டும் உங்கள் திருப்பணி…

  ஒரு விண்ணப்பம்: வியன் புலம், ஆற்றொழுக்கு – இவற்றிற்கு கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் என்னைப் போன்ற மாணாக்கர்களுக்கு உதவும்..

  • அதுசரி 🙂 ஏற்கனவே சொன்னதுதான், வெள்ளத்தில் அடிச்சுட்டு போகும்போதும் கெத்தா உக்காந்திருக்குற மாதிரி பாவ்லாவாச்சும் குடுக்கணும்.

   ஆற்றொழுக்கு – ஆற்றின் நீரோட்டம், இங்க நான் தெளிந்த நீரோட்டம்னும் எடுத்துக்குறேன்.

   வியன் புலம் – விரிந்த, பரந்த நிலம் – மொட்டையின் களம்.

 6. சுவையாக எழுதுகிறீர்கள். இந்தப் பாடல்கள் அவ்வளவு பழக்கமில்லை. கன்னிப்பொண்ணு பாடலின் சரணங்களை விவரித்தது அருமை.

  >>தொடர்ந்ததென்பதுவரைதான்>

  நான் இது வரை படித்ததிலேயே நீளமான வார்த்தைகளில் ஒன்று. 🙂

  • ஹா ஹா.. பொதுவா எனக்கு ஒரு சொல்லை அத்துடன் முடிச்சுப் பழக்கமில்லை. ஊக்கத்திற்கு நன்றியோ நன்றி! 🙂

 7. பின்னணிப் பாடகர்களில் எப்போதும் என் மனம் கவர்ந்த பாடகர் SPB தான். ராஜாவின் பாடல்களாக இருந்தாலும் எஸ்.பி.பி.க்காகவும் யேசுதாசுக்காகவும் ஜெயச்சந்திரனுக்காகவும் பிரத்யேகமாக கேட்பதுபோல் மலேசியாவின் குரலுக்காக பிரத்யேகமாக எந்தப் பாடலும் கேட்டதில்லை. Folk பாடல்களுக்கு மட்டுமே அவர் குரல் பொருந்தும் என்ற எண்ணம் இருந்தது. பொதுவாக என் மனசு தங்கம், ஆசை நூறு வகை, போன்ற பாடல்களில் ஈர்ப்பில்லை. கோடை கால காற்றே, என்றென்றும் ஆனந்தமே போன்ற பாடல்களைக் கூட SPB.பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்ததுண்டு. அவரது குரலில் ‘ஏ ராசாத்தி’ பாடலில் ‘பந்தலிட்டு பரிசம் போட்டு…’ வரிகள் மிகவும் பிடிக்கும்.

  #365RajaQuizல் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகுதான் மலேசியா பாடல்களை சற்று உன்னிப்பாக அவர் குரலுக்காக கேட்கிறேன். ஒவ்வொருமுறையும் @Rexarul மலேசியாவை மிகவும் சிலாகிக்கும் போதுதான் அவர் versatility புரிந்தது. பல பாடல்கள் தெரியாமலே போயிருக்கின்றன. ‘இதயமே பாடல் கூட அதில்தான் முதன்முதலில் கேட்டேன். சமீபமாக கவர்ந்தது கல்யாண கச்சேரி படத்திலிருந்து ‘காதல் கிளி’ பாடல். அடிக்கடி கேட்கிறேன்.

  BTW, நன்றாக எழுகிறீர்கள். தொடர்ந்து எழுதவும் 🙂

  • ஊக்கத்திற்கு நன்றி, கார்த்திக். 🙂

   ‘அள்ளித் தந்த வானம்’லாம் பேசமாட்றீங்களே? 😛

 8. அருமையா எழுதறீங்க. 4 போஸ்ட் படிச்சா நானும் மாஃபியா குழுமத்தில் சேர்ந்திடுவேனோன்னு நினைக்கிற அளவுக்கு ஈர்ப்போட இருக்கு. தொடர்ந்து கலக்குங்க.

  நீங்க நிறைய இசை வகைகளில் பரிச்சயமானவர்னு தெரியும். திரையிசை, ராஜா இசையையும் தாண்டி விரிவான தளத்தில் இசை விமர்சனங்கள் எழுதி மென்மேலும் வளர வாழ்த்துகள் அண்ணாச்சி!

 9. கொஞ்சம் ’சிம்பிள்’ (As in mallu ‘simble’) பாட்டா எடுத்துக்கப்பா..ஒரு கூட்டுக்கிளியாக போதும் என்னை எச்சூழ்நிலையிலும் சரியாக்க..ராஜாவின் மிகச்சிறந்த பாடகர் MV தான் எபொவரை..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s